சைவத்தமிழ் இலக்கிய பணியில் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன்

ஒரு மொழி மற்றும் பண்பாட்டு இருப்பிற்கு இலக்கிய உருவாக்கங்கள் அவசியமாகின்றது. இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடியாகவும் தலைமுறைகளுக்கான ஊடகமாகவும் செயலாற்றுகின்றது. புண்பாடு மற்றும் மொழிக்காக பணியாற்றும் பல போராளிகளின் கருவியாக இலக்கியங்கள் அமைந்துள்ளது. அத்தகைய கருவியை செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் ஐயா அவர்களும், தன்னுடைய மொழி மற்றும் பண்பாட்டின் இருப்பை பேணி வளர்க்கும் பணியில் பயன்படுத்தி உள்ளார். திருமுருகன் ஐயா அவர்களினை சமயத் தலைவராக அவரது சொற்பொழிவு, ஆலய பரிபாலனம் மற்றும் ஆலய நிர்மானங்கள் போன்றவற்றினூடாக வரையறுக்கும் பொதுத் தன்மை காணப்படுகின்றது. ஈழத்தில் சைவ சமயப் பணி என்பது தமிழ் மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுடன் ஒருங்கிணைந்தது என்பது நிராகரிக்க முடியாத எதார்த்தமாகும். இலங்கையின் அரசியலில் தொடரும் ஆக்கிரமிப்புக்களும் அதனையே உறுதி செய்கின்றது. இவ்ஒழுங்கிலே திருமுருகன் ஐயா அவர்கள் சைவ சமயத்தின் முகவரியில் தமிழன்னையை இலக்கியங்களால் அலங்கரிக்கும் கைங்கரியத்தை ஆற்றி வருகின்றார். இக்கட்டுரை எதிர்கால ஆய்வானர்களுக்கு புதிய தேடலுக்கான ஆய்வுப்பொருளை வழங்கக்கூடியதாக, செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் ஐயா அவர்களின் இலக்கியப் பணியை அடையாளங்காண்பதாகவும் தொகுப்பதாகவுமே உருவாக்கப்பட்டுள்ளது.

திருமுருகன் ஐயா அவர்கள் இதழாசிரியராக, நூலாசிரியாக, பதிப்பாசிரியராக மற்றும் இளம் தலைமுறைகளை இலக்கியப்பணியில் ஒருங்கிணைக்கும் வழிகாட்டியாகவும் பல பரிணாமங்களை இலக்கியப் பணிக்கு வழங்கி வருகின்றார்.

புத்தக வடிவில் இணையத்தில் வாசிக்க

https://online.pubhtml5.com/jolkk/dqso

Pdf வடிவில் Download செய்து கொள்வதற்கு

https://drive.google.com/file/d/1ID5RjMUGxDPXaFGayhs-ZGC_xLsdokHy/view?usp=sharing